News
JULY 2026
6th July 2026
தினம் ஒரு அகவல் 350
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 350
புனலினுள் புனலாய்ப் புனல் இடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி !
நீர் என்னும் பூதத்தின் உள்ளே அடங்கியுள்ள நுட்பமான நீரின் சக்தியாகவும், அந்த நீர் பரவியுள்ள இடைவெளிகளிலும் நீரின் தன்மையாகவே நிறைந்து, ஒளிர்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


