News
JULY 2026
தினம் ஒரு அகவல் 364
நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 364
நீர் நிலை திரை வளர்நிலை தனை அளவி
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
நீர் என்னும் பூதத்தின் நிலைப்பாட்டினையும், கடல் அலைகள் எவ்வாறு திரை போல் உள்ளதோ, அதுபோல உலக நீர் அனைத்தையும் அளந்து உலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டு, தன் கட்டுக்குள் வகுத்துள்ள அருள்மிக்க பெரும் ஒளியே!


