News
JULY 2026
தினம் ஒரு அகவல் 372
மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 372
மண்ணினில் ஐம்பூ வகுத்து அதில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலமாகிய பூதத்தில் மற்ற நான்கு பூதங்களின் (நீர், தீ, காற்று, ஆகாயம்) தன்மைகளையும் கலந்து, அவற்றுக்கான ஐந்திறங்களான குணங்களையும் பொருந்தச் செய்து உலகைப் படைத்த பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


