News
JULY 2026
31st July 2026
தினம் ஒரு அகவல் 402
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 402
மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும்
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பூமியின் இயல்பான அம்சங்களை (மண் வகைகள், வளங்கள்) பல பிரிவுகளாக வகுத்து அமைத்து, அந்தப் பூமியின் பயன்பாட்டினை, சமநிலையாக பொருந்தும்படி செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


