News
AUGUST 2026
19th August 2026
தினம் ஒரு அகவல் 440
தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 440
தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பை நன்மை செய்யும் அருள் நிலை, ஞானத்தை உருவாக்கும் திரு நிலை (மூலாக்னி), உயிரை உருவாக்கும் கரு நிலை ஆகிய முப்பெரும் நிலைகளையும் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


