News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 444
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 444
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பின் தத்துவமே எந்த பொருளானாலும், அது இணையும் போது அதை பொசுக்கும் தன்மையே. அதுவே உயர்வு தாழ்வு இல்லாத சமநிலையாகும். அந்த சமநிலையிலும் மேன்மையாக விளங்கும் நடுநிலைமையையும் அமைத்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


