News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 494
வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 494
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
அளியுற – அருள் உண்டாக / கருணையோடு அணைவு – ஈர்ப்பு
ஆகாயம் என்பது பரந்த பிரபஞ்சத்தின் எல்லைகள் இல்லாத வெட்ட வெளியாகும். அந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறாகிய நமது உலகத்தில் பொருள்கள் ஒன்றுக்கொன்று இடம் பிரிந்து இருக்கும் விரிவான தன்மையையும், அதே சமயம் ஒன்றை ஒன்று நெருங்கிச் சேரும் ஈர்ப்புத் தன்மையையும், உயிர்கள் வாழும் வண்ணம் மிகுந்த கருணையுடன் முறையாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


