News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 554
பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 554
பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாய வெளி என்னும் பூதத்தின் எல்லைக்குள், பரவி விரிந்துள்ள மற்ற நான்கு மகா பூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று) அவை இயங்குவதற்கேற்ற மிகப் பரந்த இடைவெளியை அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


