News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 578
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 578
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
குற்றங்கள் யாவும் நீங்கிய தூய்மையான கருவிகள் (மனம், அறிவு போன்றவை), மாசற்ற சுத்த நல்வெளியில் ஒரு பேரரசைப் போலத் தடையின்றி இயங்கி அரசாட்சி செய்யும் வண்ணம் அந்த மேலான நிலையை வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ! இங்கு ஆன்மா கருவிகளை அடக்கி ஆளும் திறமை பெறுகிறது.


