News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 600
நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 600
நாதமாம் பிரமமும் நாத அண்டங்களும்
ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
படைப்பின் முதல் வெளிப்பாடு அதிர்வாகும். அந்த அதிர்வே நாதமாகும். நாதத்தின் வடிவான பரப்பிரம்மத்தையும், அந்த நாதத்தினால் தாங்கப்படும் அண்டங்களையும், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமாக அமையும்படி வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!
யோகிகள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது, முதலில் புற ஒலிகள் அடங்கும். பிறகு, அகாரத்தையும் உகாரத்தையும் மகாரமான புருவ மத்தியில் சேர்க்கும் போது உள்ளுக்குள் ஒரு நுட்பமான ஓசை கேட்கும். அதுவே நாதம். அந்த நாதமே ‘நாதப் பிரம்மத்தில்’ (பரவெளியில்) கொண்டு சேர்க்கும். இந்த ஆதாரப் பாதையை வகுத்துக் கொடுத்தவர் அந்த அருட்பெருஞ்ஜோதி என்பது வள்ளலாரின் வாக்கு.


