குரு உபதேசம் – 3824
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களில் உயர்ந்த பிறப்பு மனித பிறப்பாகும். உயர்ந்த பிறப்பாகிய மனிதனுக்கு தேவையான உணவு, உடை, தங்கும் வசதி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தால் மனிதனை படைத்த கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்பதையும் உபகாரம் செய்வோர்க்கு அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.