Prasanna
குரு உபதேசம் – 3721
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஏழைகள்பால் கருணை கொண்டோருக்கு பதவிகள் தாமே வரத்தான் செய்யும். அவர்கள் பதவி வகிக்கும் நாட்டில் பருவமழை தவறாது பெய்யும், நாடு செழிக்கும், எல்லா வளமும் பெருகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3720
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானை வணங்க வணங்க, வணங்குவோரிடம் உள்ள லோபித்தனம் மறையும். அன்னதானம் செய்வார்கள், ஜீவதயவை பெறுவார்கள், ஜீவதயவின் தலைவன் முருகனின் அருள்பார்வைக்கு ஆளாகுவார்கள். அதனால் செல்வம் மேலும் பெருகும், நீடிய ஆயுளும், மனவளமும், அருள்வளமும் பெருகும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3719
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நிலையாமையை உணரச் செய்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிலைப்பதற்கு அருள்செய்வதும் ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை உணரலாம்.