Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3716

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அறம், பொருள், இன்பம், வீடுபேற்றிற்கு தலைவனான முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க இளமை நிலையாமை, உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை அறியச்செய்தும் இதற்கு காரணமாய் இருக்கக்கூடிய தூல தேகத்தையும், சூட்சும தேகத்தையும் அறியச்செய்து அதாவது புறஉடம்பையும், அகஉடம்பையும் அறியச் செய்து, தூல தேகத்தினில் உள்ள காமவிகாரத்தை நீத்து போகச்செய்து சூட்சும தேகமாகிய ஒளிதேகத்தை பெற அருள்செய்வான் முருகன் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3715

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே செய்து தாய் தந்தையரிடம் ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும் அதை விட்டுவிட்டு வாழும் போது தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரசெய்யாமல் தாய் தந்தையர் இறந்தபின் அவர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று அமாவாசை விரதம் இருப்பது போன்ற, இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்குகளால் ஆன செயல்களை பேரறிவுடைய ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இருக்கும்போது கடமையை சரிவர செய்யாமல் இறந்தவர்களுக்காக செய்கின்ற … Read more

குரு உபதேசம் – 3714

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இப்பிரபஞ்சத்தில் தோன்றிய உயிர்களிலேயே மோட்சலாபத்தை அடையும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை அடைவதற்கு புண்ணியபலமும், பூஜைபலமும், ஞானியர் அருள்பலமும் இருந்தாலன்றி அடைய முடியாது என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3713

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்த புண்ணியவான்களுக்கு மட்டுமே முருகப்பெருமானை பூஜிக்கவும், வழிபடவும், அருளைப்பெறவும் வாய்ப்புகள் கிடைக்குமென்றும் மற்றயவர்க்கெல்லாம் அந்த வாய்ப்பு இல்லை என்பதையும் அறியலாம்.