Prasanna
குரு உபதேசம் – 3709
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணியம் செய்வதற்கும், பக்தி செலுத்துவதற்கும் முருகனே துணையாய் இருந்து வழிநடத்தி நம்மை காப்பாற்றுவான்.
குரு உபதேசம் – 3708
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனை வணங்க வணங்க, எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிகின்ற ஜீவதயவை வரமாய் பெறுவார்கள். ஜீவதயவு பெருக பெருக, மும்மலக்கசடால் ஆன இந்த தேகமே பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறதையும் அறியச்செய்து அறியாமையையும், பலகீனங்களையும் உண்டாக்குகின்ற மும்மலதேகத்தின் தன்மையை உணரச்செய்கிறான். தேகம் மரணமிலாப் பெருவாழ்வை பெறத் தடையாக இருப்பது மும்மலமே என்றும், நமது தேகமே மும்மலக் குற்றத்தால் அறியாமை உண்டுபண்ணுகிறது என்பதையும் அறியச்செய்து மும்மலக் கசடை நீக்கி தூய … Read more
குரு உபதேசம் – 3707
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மும்மலத்தாலான உடம்பையும், அதனுள் உள்ள மலக்குற்றங்களையும் அறியச்செய்தும் அந்த உடம்பினுள்ளே உள்ள அற்புத சக்தியை தட்டி எழுப்பியும், அச்சக்தி வெளிப்பட உற்ற துணையாய் இருந்து அழியக்கூடிய இந்த மனிததேகத்தை, காமதேகத்தை அழியாத பொன்னுடம்பாய், ஒளி உடம்பாய் ஆக்கி என்றும் அழிவிலாத தேகமாக மாற்றி யுகயுகத்தும் அழியாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3706
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகளெல்லாம் நம்முள் அகன்று அனைவரும் ஒரே இனமாக கருதப்படுகின்ற மனோநிலையும், சூழ்நிலையும் உண்டாகி அனைத்தும் ஒரே இனமாக கருதப்படும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3705
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நோய், வறுமை, பகை, மனஉளைச்சல் ஆகியவை தீருவதற்கு அன்னதானம்தான் மருந்து என அறிந்திட்டாலும் அன்னதானம் செய்து அவரவர் வினைகளை போக்கிட தக்க சூழ்நிலையும், வழிவகைகளும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான், முருகன் அருள் செய்தால்தான், முருகன் விரும்பினால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம். முருகனது அருளாசியே தர்மமாய், வினை நீக்கமாய் மாறும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3704
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காட்டிற்கு காரணமான மனித தேகத்தை சார்ந்து பிறவிக்கு காரணமான காமதேகத்தை நீர்த்து ஒளிஉடம்பாக ஆக்குகிற சக்தியனைத்தும் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.