Prasanna
குரு உபதேசம் – 4039
முருகப்பெருமானை வணங்கிட, உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 4038
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் , சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 4037
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 4035
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம்.