Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3683

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற நிலையையும், ஆயிரங்கோடி மன்மதர்களை ஒத்த பேரழகுடையவனாய், மாறா இளமையுடையவனாய் ஆகி, ஞானத்திற்கே மூல சக்தியாய், ஞானபண்டிதனாக விளங்கி இயற்கை கடவுளோடு இயற்கை கடவுளாய் இரண்டற கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றவனுமாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றாலன்றி … Read more

குரு உபதேசம் – 3682

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மது அருந்துவோர், சூதாடுவோர், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர், கடன்வாங்கி ஆடம்பரமாக இருப்போர் போன்றவர்கள் பாவத்தின் சின்னமென்றும் உணர்த்துவதோடு அவர்களது நட்பு ஒரு போதும் நமக்கு அமையாமல் காப்பான் முருகன். இது போன்ற தீய பழக்கங்கள் முருகனை வணங்குவோர்க்கு ஒருபோதும் வந்துவிடாமலும் காப்பான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் – 3681

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்கான மார்க்கத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவன் முருகப்பெருமானே ஆவார் என்பதை அறிந்து தெளிந்து உணரலாம். உலக மக்கள் மாணவர்களாக இருந்தபோது பள்ளிகளில் தக்கமுறையில் பக்திநெறியையும், புண்ணியத்தின் அவசியத்தையும் போதிக்காத காரணத்தினாலே தான், மாணவர்களிடத்து பக்தி இல்லாமல் போய் பாவ புண்ணியங்களை அறியாது, தீய நெறியில் சென்றதாலே இவ்வுலகினில் புண்ணியம் குறைந்து இயற்கை சீற்றங்கள் உண்டாவதை அறியலாம்.