Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3674

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு ஏழைக்கு உணவு தந்தால் கடவுளுக்கே உணவு தந்ததாக அறிகின்ற அறிவும், ஒரு ஏழைக்கு மானம் காக்க தருகின்ற உடை கடவுளுக்கே உடை தந்ததாக அறிகின்ற அறிவைப் பெற்று, எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவர்களே என்றும், கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு செய்கின்ற அத்தனையும் கடவுளுக்கு செய்வதாகவே அர்த்தம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3673

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பிறப்பு, இறப்பு, வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறிந்தாலும், பிறவாநிலையாகிய வீடு பேற்றிற்கு தலைவனும், அதை அளிக்கும் தலைவனும் முருகனே என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3672

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால், அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும். குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால், அரங்கனாய் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும், மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3671

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசன் ஆசி பெற்றிட்டால் நோய் இருக்காது, கடன் சுமை இருக்காது, வறுமை இருக்காது, திருடர்களால் இடையூறு வராது என்பதை அறியலாம்.