Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3670

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கடவுளுக்கும் கடவுளான கந்தக்கடவுளான முருகப்பெருமானை போற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் நாமும் கடவுளாகலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3669

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலே மிகச் சிறந்தது மனிதன்தான். அப்படிப்பட்ட மனித இனத்திற்கு தொண்டு செய்கின்ற வாய்ப்பு கிடைத்தால் அது கடவுளுக்கு தொண்டு செய்கின்ற வாய்ப்பாய் கருதி தொண்டு செய்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3668

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தூயநெறி வந்திட்ட மாபெரும் புண்ணியவான்களான ஞானியர் ஆசியில்லாமல், முருகப்பெருமானை அறியவோ, ஆசிபெறவோ முடியாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3667

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவனான அகத்தியரை பூஜை செய்திட்டால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொள்கின்ற வாய்ப்பு உண்டாகும்.

குரு உபதேசம் – 3666

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… லட்சியவாதிகள் மனைவி, மக்கள், வீடு, வாசல் என இல்லறத்தின் வழிதனிலே செல்வார்கள். ஆனால் எப்போதும் மனதினுள் இறைவனை மறவாது உலக நன்மையை கருதிய மாபெரும் இலட்சியத்துடனேயே இருப்பார்கள்.

குரு உபதேசம் – 3665

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் விளங்கி, ஞானத்தலைவனாய் விளங்கி நின்று அருள்பாலித்து வாசி நடத்திக் கொடுக்கப்பட்ட முதன்மை சீடராம், சித்தர்கோன் என்றும் குருமுனி என்றும் சொல்லப்படுகின்ற அகத்தியர் பெருமான் முதல் நந்தீசர், திருமூலர், காலாங்கிநாதர், போகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், கருவூர்தேவர், இராமலிங்கசுவாமிகள் என நவகோடி சித்தரிஷி கணங்களைக் கொண்டதும், வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபினர் தம்மையும், முருகப்பெருமானையும் வணங்கினால், முற்றுப்பெற்ற ஞானிகள் கருணைக்கு ஆளாகி ஞானத்தலைவன் முருகப்பெருமானால் வாசி … Read more