Prasanna
குரு உபதேசம் – 3664
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உடம்பே ஞானத்தை அடைய கருவியாகவும் காரண கருவியாகவும், காரிய கருவியாகவும் உள்ளதை அறியலாம். எந்த உடம்பு பல ஜென்மங்களாக தொடர்ந்து செய்திட்ட பாவங்களினால் ஞானம் அடைவது தடைபட்டதோ அந்த உடம்பின் துணை கொண்டே புண்ணியங்களை செய்ய செய்ய, தருமங்களை செய்யவும், சிந்தித்தும் அவரவர் கையால் கொடுத்தும் பழக பழக தீமைசெய்து பழகிய தேகம், நன்மை செய்ய பழகியதால் பாவம் ஒழிந்து புண்ணியம் பெருகும். புண்ணியம் பெருக பெருக மெய் அறிவு … Read more
குரு உபதேசம் – 3663
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நல்வினை தீவினையில் நம்பிக்கையும், அன்னதானத்தில் நம்பிக்கையும், சைவத்தில் நம்பிக்கையும் வைத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3662
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இகவாழ்வாகிய இல்லறத்திற்கும், பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் மற்றுமுள உலக நன்மைக்காக செயல்படுகின்ற அனைத்தும், ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் அருளினால்தான் நடக்கின்றது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3661
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முற்றுப்பெற்ற ஞானியர் கூறிய உபதேசங்களை கேட்கவும், அறியவும், படிக்கவும், உணரவும் வாய்ப்புகள் ஏற்படும். கோளறுபதிகம், மகான் மாணிக்கவாசகரின் சிவபுராணம், ஒளவையாரின் விநாயகர் அகவல் போன்ற நிலையாமையை உணர்த்தும் ஞானிகளின் ஞான நூல்களை கற்கும் வாய்ப்பு உண்டாவதோடு நிலைப்பெற்ற வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கமும் புலப்படும் என்பதை அறியலாம்.