Prasanna
குரு உபதேசம் – 3658
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பண்புடையவர்களது நட்பு அமையும், நல்ல சூழ்நிலையில் வீடு அமையும், பண்புள்ள மனைவியும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும், பண்புடைய சுற்றமும் உண்டாகி, எதையும் ஆழ்ந்து சிந்திக்கின்ற அறிவும், ஞானத்திற்குரிய பரிபக்குவமும் உண்டாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான தக்க சூழ்நிலையும், சற்குரு, சொற்குருவின் தொடர்பும், ஆசியையும் பெறுகின்ற அற்புதமான வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3657
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆறறிவு உள்ள மனிதர்கள், முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்று, முருகப்பெருமானை பூஜிக்கின்றவர்களுக்கு ஏதேனும் இடையூறு வந்திட்டால், அக்கணமே தோன்றி இடையூறு நீக்கி அருள் செய்வான் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3656
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இகவாழ்வும் சித்திக்கும், பரவாழ்வும் சித்திக்கும், அதுமட்டுமன்றி இகவாழ்விற்கும் பரவாழ்விற்கும் அப்பாற்பட்டதான ஐந்தொழில் புரியும் வல்லமை பெற்றதான, தோன்றி மறையக்கூடிய வல்லமை பெற்ற ஒளிதேகத்தை உடையதுமான பிரம்மநிலை வாழ்வையும் பெறலாம்..
குரு உபதேசம் – 3655
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… வினைக்குரிய காரணத்தை அறியச் செய்தும், வினைக்குரிய காரணத்தை உணரச்செய்தும், மீண்டும் வினை சூழாதிருக்க தேவையான வாய்ப்பையும், வினையை அனுபவிக்க செய்தும், வினையிலிருந்து மீட்கவும் செய்கிறான் முருகப்பெருமான்.