Prasanna
குரு உபதேசம் – 4034
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட, சைவ உணவை கடைப்பிடித்து அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.
குரு உபதேசம் – 4033
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் , மூச்சுக்காற்றின் இயக்கமும் அதை லயப்படுத்துகின்ற அறிவையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்று அறியலாம். முருகன் அருளால் மூச்சுக்காற்று லயப்பட்டால் கடுகை மலையாக்கலாம், மலையை கடுகாக்கலாம். ஆணையும் பெண்ணாக்கலாம் பெண்ணையும் ஆணாக்கலாம். அதுமட்டுமன்று ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்யலாம். ஐந்தொழில் செய்யும் வல்லமையை முருகப்பெருமானின் அருளாசியினாலன்றி வேறு எதனாலும் பெற முடியாது என்று அறியலாம்.