Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3652

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க வினைகள் குறையும், மேலும் பூஜிக்க பூஜிக்க செல்வம் பெருகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயை சிந்தை உண்டாகும், மேலும் மேலும் பூஜிக்க பூஜிக்க ஞானத்திற்குரிய அறிவு உண்டாகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயவு பெருகி அவனே தயவுடையோராய் மாறி நின்று ஞானத்தை அடைகின்ற வாய்ப்பையும் பெறுவார்கள்.

குரு உபதேசம் – 3651

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… வருங்காலங்களிலே நடக்க இருக்கின்ற ஞானசித்தர் காலத்திலே, தொண்டுகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3650

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… புலித்தோல், மான் தோல் ஆசனம் அமைத்து காவி உடுத்தி பொய் பேசி மக்களை வஞ்சித்து ஜாலம் செய்து ஏமாற்றுவான். இதுபோன்ற கபட வேடதாரிகளை இனம் கண்டுபிடிக்கலாம். போலிவேடதாரிகள் புற்று நோய் வந்தும், வேறு பல துர்மரணங்களால் இறந்து போய்விடுவார்கள் என்பதையும் அறியலாம். முருகனது திருவடியைப் பற்றி பூஜை செய்து போலி ஆன்மீகவாதிகளை இனங்கண்டு விலகிட வேண்டும். போலி வேடதாரிகளை நம்பி காலத்தையும் நேரத்தையும் இழப்பதோடு கைப்பொருளையும் இழக்கின்ற சூழ்நிலையிலிருந்தும் விடுபடலாம்.

குரு உபதேசம் – 3649

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சாதுசங்க தொடர்பு என்பது பக்திநெறியினில் அமையலாம், யோகநெறியில் அமையலாம் அல்லது ஏதோ வீண் ஆரவார பூஜைகளையும், ஆடம்பர பூஜைகளையும் கொண்ட சங்க தொடர்பும் அமையலாம். ஆனால் முருகனை வணங்க வணங்கத்தான், உண்மையான பக்தியுடைய, உண்மையான யோகம் அறிந்த, உண்மையான தவம் செய்திட்ட, உண்மையான ஞானம் அறிந்த, உண்மையான முக்தியை அறிந்த, உண்மையான சித்தியை அறிந்த சாதுசங்க தொடர்பை பெறுவார்கள். பக்தி, யோகம், ஞானம், முக்தி, சித்தியென ஞானத்தின் அத்துணைப் படிகட்டுகளையும் … Read more