Prasanna
குரு உபதேசம் – 3648
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆறறிவு உள்ள மனிதனுக்குத்தான் கடவுளை அடையும் மார்க்கம் உள்ளது. அதிலும் சிறப்பறிவு உள்ளவர்கள்தான் அந்த வழிமுறையை அடைய முடியும். அகத்தீசனை வணங்கினால்தான் சிறப்பறிவை பெற முடியும். சிறப்பறிவை பெற்றவர்கள்தான் ஜீவதயவினைப் பற்றி அறிந்து உணர்ந்து உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி தொண்டுகள் செய்து, ஜீவதயவைப் பெருக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3647
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனித வர்க்கத்தில் அவரவர் செய்திட்ட புண்ணியத்திற்கு ஏற்ப, வேண்டுதலுக்கு ஏற்ப அருள் செய்வான் முதற்கடவுளாம் முருகப்பெருமான். எல்லோரும் எல்லாவற்றையும் வேண்டலாம். ஆனால் அவரவர் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் முருகன் அருள் செய்வான். அப்படி முன்ஜென்ம புண்ணியத்தில் இறைவன் கருணையாலே வேண்டுதலிற்கு ஏற்ப அளிக்கப்பட்ட பதவி, பட்டம், வாய்ப்புகள், பொறுப்புகள், அமைப்புகள் ஆகியவற்றை வரமாய் பெற்று வாழ்கின்றோர் தாம் வேண்டி விரும்பி பெற்ற அந்த வரத்திற்கேற்பவும் முருகனது நோக்கத்திற்கு ஏற்பவும், உலகினில் தர்மத்தினின்று … Read more
குரு உபதேசம் – 3646
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இகவாழ்வை செம்மையாக நடத்திட ஆசி பெறலாம், பரவாழ்வையும் செம்மையாக நடத்திட ஆசி பெறலாம்.