Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3639

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம்.

குரு உபதேசம் – 3638

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர், ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3637

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல், ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.

குரு உபதேசம் – 3636

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பிறர் செய்த குற்றத்தை மன்னித்தல், மறத்தல், மனம்விட்டு பழகி நட்பை பெருக்குதல் ஆகிய அனைத்து நற்பண்புகளையும் முருகப்பெருமான் ஆசியால் பெறலாம் என்பதை அறியலாம். முருகப்பெருமானது ஆசியை பெற, முதலில் ஜீவதயவுடையவராய் ஆதல் வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” … Read more