Prasanna
குரு உபதேசம் – 3632
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வின் ரகசியத்தை அறியலாம். தொடர்பிறவிக்கு காரணமாய் இருப்பது உடம்பா? உயிரா? என ஆராய்ந்து பார்க்கும் போது, உடல் மாசு காரணமாகத்தான் உயிர் மாசுபடுகிறது. உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உடல்மாசும் உயிர்மாசும் நீங்கி இனி பிறவாமையை அடைய விரும்புகிறவர்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறவேண்டும். முருகனது ஆசியைப் பெற விரும்பினால் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு … Read more
குரு உபதேசம் – 3631
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆசி பெற்றவர் குடும்பத்திலும், கிராமத்திலும், பெரிய கிராமத்திலும், நகரத்திலும், நாட்டிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அகத்தீசன் ஆசியோடு, அரங்கர் துணையிருக்க எதையும் சமாளிக்கலாம் என்கிற தைரியமும், வாய்ப்பையும் பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3630
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒருமுறையேனும் “முருகா” என்று முருகனின் நாமத்தை மனமுருகி சொல்லிவிட்டால் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், அன்னதானம் செய்கின்ற அறிவும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.