Prasanna
குரு உபதேசம் – 3629
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே தர்ம°தாபனத்தில் தொண்டுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர்கள் மீது குறை காண்பவர்கள் முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தொண்டர்களிடையே உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் இது சகஜம் என்றும், சாந்தமாக இருந்து செயல்புரிய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் குறைகள் கூறினால் தர்மசெயல்கள் பாதிக்கப்படும் என்றும், தர்மம் பாதித்தால் தர்மதேவனாகிய முருகப்பெருமான் நம்மை தண்டிப்பான் என்பதையும் உணர்ந்து குறைகளை பொறுத்துக் கொண்டு சகஜ … Read more
குரு உபதேசம் – 3628
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆயிரம் கோடி அசுரர்களை நொடியில் அழித்து பண்புள்ள மக்களை காக்கின்ற வல்லமையுடைய வல்லவன்தான் முருகப்பெருமான். ஆயிரம் தாயினும் மிக்க தாயன்புடையவன் முருகப்பெருமான், அவன் கருணைக்கடல், தயவே வடிவானவன்தான். ஆனால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டால், நொடிப்பொழுது தாங்கமாட்டான், அவன் கோபம் எல்லையில்லாமல் போய்விடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3627
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒருவனது இலட்சியம் உலக நன்மைக்காக இருக்குமானால், உயர்ந்த நோக்கமாக இருக்குமானால், அதை முருகப்பெருமான் அருளால் செய்து முடிக்கலாம்.