Prasanna
குரு உபதேசம் – 3626
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சைவ உணவில் நம்பிக்கையும், சைவ உணவை உண்ணுகின்ற வாய்ப்பையும், அசைவத்தை உண்ணாது சைவத்தில் தொடர்ந்து வைராக்கியமாக வருகின்ற வாய்ப்பையும் பெறுவதோடு, முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி இடைவிடாது தொடர்ந்து பூஜை செய்கின்ற வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3625
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மரணமிலாப் பெருவாழ்வை அடைய முருகனது அருள் இல்லையேல், அணுவளவும் முடியாது என்பதையும். முருகனது ஆசியையும் அருளையும் பெற வேண்டுமென்றால், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவை மேற்கொண்டு, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதும், தினம்தினம் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே … Read more
குரு உபதேசம் – 3624
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் திருவடிகளுக்கு யார் கொத்தடிமையாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கே சகல பாதுகாப்பும் முருகப்பெருமானால் தரப்படும் என்பதை அறியலாம்.