Prasanna
குரு உபதேசம் – 4031
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட, பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன் அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார்.
குரு உபதேசம் – 4030
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 4029
முருகப்பெருமானை வணங்கிட, ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால் அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 4028
முருகனை வணங்கிட, முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம்.