குரு உபதேசம் – 3617
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உயிரினங்களுக்கு எந்த அளவிற்கு நன்மை செய்கின்றோமோ, அந்த அளவிற்கு சிறப்பறிவு கூடும் என்றும், உயிரினங்களுக்கு செய்கின்ற நன்மையாகிய தயவே சிறப்பறிவாக மாறுகிறது என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உயிரினங்களுக்கு எந்த அளவிற்கு நன்மை செய்கின்றோமோ, அந்த அளவிற்கு சிறப்பறிவு கூடும் என்றும், உயிரினங்களுக்கு செய்கின்ற நன்மையாகிய தயவே சிறப்பறிவாக மாறுகிறது என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின், உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி பார்ப்பாராயின் எல்லா மனிதருள்ளும் உள்ள முருகப்பெருமானே அவர்களை தண்டிப்பான் என்பதையும் அறியலாம். ஆதலின் சாதி, மத, இன, மொழி, தேசத்தினால் மனிதர்களை பாகுபடுத்தி இழிவுப்படுத்தினாலோ, தண்டித்தாலோ, எல்லாம் வல்ல முருகப்பெருமானின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் அறியலாம்..
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும், ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு, முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான்.