Prasanna
குரு உபதேசம் – 3610
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… காலை எழும் போதே குறைந்தது பன்னிரண்டு முறையேனும் “ஓம் அகத்தீசாய நம” என்றே, மகான் அகத்தீசன் நாமத்தை நாமஜெபமாக தினம்தினம் சொல்லி எழுந்து செயல்களை செய்திட்டால், வருகின்ற ஞானசித்தர்கள் காலத்திலே பலவிதமான நன்மைகளை பெறுவதோடு, ஞானசித்தர்கள் ஆட்சியிலே பங்குபெறலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3609
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் கட்டுப்படும், “யான்” என்ற கர்வம் நீங்கும். இவையெல்லாம் நம்மை விட்டு நீங்கி முருகனருளால் தயை சிந்தை உண்டாகும். குணக்கேடுகளற்ற முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்கின்ற மக்களுக்கு எந்த குணக்கேடுகளும் வராது.
குரு உபதேசம் – 3608
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்றும், முருகனது ஆசியை பெறுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை என்பதையும் அறியலாம்.