Prasanna
குரு உபதேசம் – 3598
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானபண்டிதன் முதல் வள்ளலார் வரையிலான ஞானத்திருக்கூட்ட மரபினர் வகுத்தும் கொடுத்தும் அளிக்கப்படுகின்ற கட்டளைகளையும், வள்ளலார் மற்றும் ஞானிகளால் வழி நடத்தப்படும் காலத்து ஞானியர் தம் கட்டளைகளையும் சிரமேற் கொண்டு எவ்வித மறுப்புமின்றி கடைப்பிடித்து உலகப்பெருமாற்றத்தை நடத்திட தொண்டு செய்கின்ற அறிவும், பரிபக்குவமும் சூழ்நிலையையும் அமையப் பெறலாம்.
குரு உபதேசம் – 3597
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் திருவடிப்பெருமைகளைப் பேசி, மக்களை நல்வழிப்படுத்துகின்ற அறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3596
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், மேலும் உயிர்களிடத்து அன்பு செய்யச் செய்தும், உயிர்களிடத்து ஆசி பெறுகின்ற அறிவையும் பெற்று, அந்த அறிவின் உதவியாலும் முருகப்பெருமான் கருணையாலும் உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம். உலக உயிர்களிடத்து ஆசி பெறுவதே தவம் என்பதையும் உணர்ந்து, உயிர்களிடத்து ஆசி பெறுவதையே தவமாய் தவறாமல் செய்து ஜீவதயவை பெருக்கி, பெறுதற்கரிய பெரும் பேற்றையும் அடையலாம். இவை அனைத்தும் முருகப்பெருமான் கருணையினாலன்றி ஒரு … Read more