Prasanna
குரு உபதேசம் – 3582
முருகனை வணங்கிட, முன்ஜென்ம பாவங்கள் முருகனருளால் நீங்க நீங்க பாவ வினைகள் நீங்கிடும், பாவ வினைகள் நீங்க நீங்க, உண்மையான அறிவு வெளிப்படும் என்பதையும் அறியலாம். ஞானிகளிடத்து நம்பிக்கையும், மரணமிலாப் பெருவாழ்வு உள்ளதையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3581
முருகா என்றால், முருகப்பெருமானை வணங்க வணங்க, பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும், நமக்கு உள்ள பொன்னும், பொருளும், பதவியும், கௌரவமும் முருகப்பெருமான் நமக்கிட்ட பிச்சையென்பதையும் அறிவதோடு, நமக்கு பிறரால் வருகின்ற துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவம்தான் என்பதையும் அறிந்து துன்புறுத்தியோர் துன்பத்தை பொறுத்துக் கொள்வானே தவிர, தனது பதவியையோ, அதிகாரத்தையோ, ஆள்பலத்தையோ, பொருளையோ பயன்படுத்தி பழிவாங்கவோ, துன்புறுத்தவோ மாட்டான். இதுவே முருகப்பெருமானை வணங்குவோர் பெறுகின்ற சிறப்பறிவாகும்.
குரு உபதேசம் – 3580
முருகா என்றால், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதான அறம், பொருள், இன்பம், வீடு பேறாகிய நான்கையும் அறியச் செய்தும், அதனை உணரச் செய்தும் அதை கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறையை அருளியும், அருளிக் காப்பவன் முருகப்பெருமான் ஒருவனே என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3579
முருகா என்றால், ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து உலக நடையில், உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும், முடிந்தால் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபங்களை மந்திரஜெபமாக கூறி முருகப்பெருமான் திருவடிகளை உளமார உருகி பூஜித்திட வேண்டும். ஜீவதயவின் தலைவனான முருகனின் ஆசியை பெற வேண்டுமாயின், முதல் தகுதியாக உயிர்க்கொலை தவிர்த்து … Read more
குரு உபதேசம் – 3578
முருகா என்றால், சைவ உணவை மேற்கொள்ளவும், சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஜீவதயவை மேற்கொள்ளவும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முருகப்பெருமானே அருள் செய்வான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3577
முருகா என்றால், கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால், கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம்.