Prasanna
குரு உபதேசம் – 3569
முருகா என்றால், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஆகிய அனைத்தும் இல்லாத என்றும் இளமையாகவே உள்ளதும் , மரணமற்றதுமான மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் அறியலாம்.
குரு உபதேசம் – 3568
முருகா என்றால், எந்த அளவிற்கு நாமஜெபம் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு அறிவு தெளிவடையும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3567
முருகா என்றால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால், முருகப்பெருமான் திருவடிகளை வணங்கினால்தான் அறிய முடியும் என்றும், முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றால்தான் இவை நான்கையும் அடைந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.