Prasanna
குரு உபதேசம் – 3566
முருகா என்றால், காமத்தால் வருகின்ற கேடுகளிலிருந்தும், கோபத்தால் வருகின்ற கேடுகளிலிருந்தும், பொறாமையால் வருகின்ற கேடுகளிலிருந்தும், பொருள் பற்றினால் வருகின்ற கேடுகளிலிருந்தும், தான் என்ற கர்வத்தினால் வருகின்ற கேடுகளிலிருந்தும் நம்மை நீக்கி, முருகன் அருள் நம்மை காப்பதோடு, முருகன் கருணையால் குணக்கேடுகளிலிருந்து விடுபட்டு, தூய்மையான மனிதனாக, பண்புள்ள மாமனிதனாக, குற்றமற்ற யோகியாய் மிக மிகத் தூய்மையான ஒளிதேகம் பெற்ற ஞானியாகவும் ஆகிடலாம் என்பதையும் அறியலாம். அழுக்கு துணியை துவைக்க துவைக்க துணியிலுள்ள அழுக்கு பிரிந்து துணி தூய்மையாவது போல, … Read more
குரு உபதேசம் – 3565
முருகா என்றால், வீடு பேறு என்ற மோட்ச இலாபம் உண்டென்றால், அது முருகப்பெருமானின் திருவருளால்தான் முடியும் என்பதை அறியலாம். முருகப்பெருமான் திருவடியை வேண்டினால் வேண்டிய அனைத்தையும் பெற்று வெற்றியை எளிதில் அடையலாம்.
குரு உபதேசம் – 3564
முருகா என்றால், கடினமான மும்மலத் திரையை விலக்க செய்து உள்ளேயுள்ள பெருஞ்ஜோதிச் சுடரை வெளிப்படச் செய்வான், ஜோதியை நம்முள்ளே தோன்றச் செய்து மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருள்வான் குருபரனே!