Prasanna
குரு உபதேசம் – 3563
முருகா என்றால், உடம்புதான் இருவினைகள் ஏற்படுவதற்கு காரணமாய் உள்ளது என்பதையும், உயிருக்கு இதில் சம்பந்தமில்லை என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3562
முருகனை வணங்கிட, சைவ உணவில் நம்பிக்கையை உண்டாக்கி கடைப்பிடித்திட வைராக்கியத்தையும், ஞானியர் திருவடி பூஜையினை தொடர்ந்து செய்திட, தடைகளில்லாத வகையிலே வாய்ப்பும் வைராக்கியமும் கிடைக்கப் பெற்று, அன்னதானம் செய்து ஜீவதயவை பெருக்குதற்கு வாய்ப்பையும் தந்து, அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றி மேல்நிலையை அடையச் செய்வான் முருகப்பெருமான்.
குரு உபதேசம் – 3561
முருகா என்றால், முதல் மொழியாம், தன்னிகரற்ற மூத்த மொழியாம், ஞானமளிக்கும் மொழியாம், தத்துவார்த்த மொழியாம், தன்னை காப்பாற்றிக் கொள்ள வல்லதும், தன்னை கற்போரையும் காப்பாற்றும் வல்லமை மிக்கதுமான உயிர் மொழியாம் ஞானத்தலைவன், தவத்தால் தோன்றிய தனி மொழியாம் தமிழைக் கற்க கற்க, தலைவன் முருகன் ஆசியைப் பெறலாம் என்பதையும், தமிழைக் கற்பவர் இக வாழ்வாகிய இல்லற வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் இனிவரும் ஞானசித்தர் காலமதனிலே உறுதியாக பெறலாம் என்பதையும், இகவாழ்வை தருகின்ற தமிழே ஞானமாய் … Read more