Prasanna
குரு உபதேசம் – 3560
முருகா என்றால், உயிரினங்களிடத்து உள்ள பசியை அறிவதும், அதை நீக்கி அவ்வுயிர்களை இன்பமடைய செய்வதும், அதற்குரிய வாய்ப்பை பெறுவதுமே உயர்ந்த வேள்வி என்றும், பிற உயிர் பசிப்பிணி போக்கி மகிழ்வதே வேள்வியின் பயன் என்பதையும் அறியலாம். வேள்வியின் பயன் ஜீவதயவை தரவல்லதாய் இருக்க வேண்டும். பசிப்பிணியாற்றும் ஜீவதயவு வேள்வியின் பயனால் ஜீவதயவு பெருகி பெருகி, ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் ஆசியை முழுமையாகப் பெற்று, பசிப்பிணியாற்றும் வேள்வி செய்வோரை நிலை உயர்த்தி, மும்மலம் நீக்கி குற்றமற்றவனாக்கி அவனை ஞானியாகவும் … Read more
குரு உபதேசம் – 3559
முருகனை வணங்கிட, மனிதனாக உள்ளவனுக்கு பலவித துன்பங்கள் இருந்தபோதும், பசித்துன்பமே மனிதனை உடனே நலியச் செய்யக்கூடிய தீராத பெருந்துன்பம் என்பதை அறிகின்ற சிறப்பறிவு உண்டாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3558
முருகனை வணங்கிட, அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற அறிவைப் பெறலாம். ஜென்மத்தைக் கடைத்தேற்றிட கசடான தேகமதை முருகன் ஆசி பெற்று உணர்ந்திடவும், அறிவு ஏற்பட்டு பாவமும் புண்ணியமும் கலந்ததே உடம்பும் என்பதையும் பாவமாகிய களங்கம் நீங்கும் போது புண்ணியமாகிய ஒளி உடம்பை பெறலாம் என்பதையும் அறியலாம்.