குரு உபதேசம் – 3554
முருகனை வணங்கிட, கிடைத்தற்கரிய மானுட பிறவியை பெற்ற நாம் அதை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற சிறப்பறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட, கிடைத்தற்கரிய மானுட பிறவியை பெற்ற நாம் அதை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற சிறப்பறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட, மகான் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம், மகான் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் போன்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல ஞான நூல்களை படித்து கடைத்தேறும் வாய்ப்பை பெறலாம் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, பரு உடம்பாகிய புற உடம்பின் துணைகொண்டே நுண்ணுடம்பாகிய ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, சிந்தை, செயல், சொல் ஆகியவை மாசுபடுவதற்கு காரணம் உடல்மாசுதான் என்றும், உடல் மாசு நீங்கினால் சிந்தை, செயல், சொல் ஆகியவையும் தூய்மையாகும் என்பதையும் அறியலாம்.