Prasanna
குரு உபதேசம் – 3550
முருகனை வணங்கிட, இடகலையாகிய சந்திரகலையையும், வலது கலையாகிய சூரியகலையையும், புருவமத்தியாகிய சுழிமுனையில் செலுத்தினால், மும்மலக் கசடுகள் நீங்கி தெளிவான அறிவைப் பெற்று ஒளி தேகத்தை பெறலாம் என்று அறியலாம். இந்த வாய்ப்பை முருகன் அருளால்தான் பெற முடியும். வேறு மார்க்கமில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3549
முருகனை வணங்கிட, பசி நீக்கும் எண்ணம் உள்ளவருக்கு முருகப்பெருமானின் ஆசி கிடைக்கும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3548
முருகனை வணங்கிட, சைவ உணவை கடைப்பிடிப்பதும், தினம் தினம் தவறாமல் காலை, மாலை, இரவு குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம”என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ தவறாமல் பூஜை செய்வதுவே பயனுள்ள நாட்களாகும் என்பதை அறியலாம்.