Prasanna
குரு உபதேசம் – 3547
முருகனை வணங்கிட, உடல் மாசு நீங்கும், உயிர் மாசும் நீங்கும், மனமாசும் நீங்கும், முருகனருளால் உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு ஆகிய அனைத்தும் நீங்கி தூய்மையான ஒளிஉடம்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3546
முருகனை வணங்கிட, சைவ உணவை மேற்கொள்ளவும், பிற உயிர்கள்பால் கருணை கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3545
முருகனை வணங்கிட, செய்யக் கூடிய செயல்களிலே எது பாவம், எது புண்ணியம் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம்.