Prasanna
குரு உபதேசம் – 3544
முருகனை வணங்கிட, கொடுக்கக் கூடிய மனமும் முருகனே, அதற்கு தேவையான பொருளும் அவனே. கிடைக்கும் புண்ணியமும் அவனே, அதனால் வருகின்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயமும் அவனே என அனைத்தும் அவனே ஆகி நின்று, தர்மத்தின் தலைவனாக விளங்கி நம்மை காப்பவன் முருகனே என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3543
முருகனை வணங்கிட, அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து, அருள் செய்து காத்ததைப் போல, நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி, அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3542
முருகனை வணங்கிட, பிற உயிர்களுக்கு செய்கின்ற நன்மையே, நமது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்பதை அறியலாம். ஆன்ம ஆக்கம் கூடிட கூடிட அறிவும், மென்மையாக மாறி சிறப்பறிவாக மாறிடும். இதை முருகப்பெருமான் அருளினால் பெறலாம் என்பதையும் அறிந்து, ஜீவதயவின் வழி ஆன்மாவை ஆக்கப்படுத்தி சிறப்பறிவையும் பெறலாம்.