Prasanna
குரு உபதேசம் – 3534
முருகனை வணங்கிட, சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும், முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து, முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3533
முருகனை வணங்கிட, எதையும் செய்யும் வல்லவர்களான ஞானிகள் திருவடியைப் பற்றி பூஜிப்பதே உண்மையான அறிவும், அதுவே உண்மையான பூஜையும் ஆகும் என்பதை உணர்வார்கள்.
குரு உபதேசம் – 3532
முருகனை வணங்கிட, நமது உடம்பின் வெப்பமே சிவம் என்றும், குளிர்ச்சியே சக்தி என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.