குரு உபதேசம் – 3531
முருகனை வணங்கிட, ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவராசிகள் மகிழ, வாழ்வதற்குரிய அறிவும், பரிபக்குவமும் முருகப்பெருமான் அருளால்தான் பெற முடியும் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவராசிகள் மகிழ, வாழ்வதற்குரிய அறிவும், பரிபக்குவமும் முருகப்பெருமான் அருளால்தான் பெற முடியும் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, பக்தி, யோகம், ஞானம், தானம் இந்த நான்கும் சித்திபெறுவதற்கு முருகப்பெருமான் ஆசியால்தான் முடியும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, முருகப்பெருமானின் திருவடி நிழலில் வாழ்கின்ற மக்கள், பிற உயிர்கள் மகிழும்படியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம்.
முருகனை வணங்கிட, ஞானிகள் திருவடிகளை பூசித்து ஆசி பெறுவதே உண்மையான பக்தி என்பதை அறியலாம்.