Prasanna
குரு உபதேசம் – 3526
முருகனை வணங்கிட, பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3525
முருகனை வணங்கிட, உயிர்களுக்கு நன்மை செய்கின்ற அறிவையும் வாய்ப்பையும் பெறுவதோடு, உயிர்கள் மகிழ்வினிலே ஆசியையும் பெற்றிட வழிவகைகளையும் பெற்று உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3524
முருகனை வணங்கிட, அகத்தீசன் முதல் அனைத்து சித்தர்களுக்கும் ஆசான் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.