Prasanna
குரு உபதேசம் – 3510
முருகனை வணங்கிட, சைவ உணவும், தூய மனமும், தயை சிந்தையும், பக்தியும் தவமுயற்சிக்கு அடிப்படை ஆதாரம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3509
முருகனை வணங்கிட, பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும், சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3508
முருகனை வணங்கிட, பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன், அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3507
முருகனை வணங்கிட, தன்னையும் அறியலாம் தலைவனையும் அறியக் கூடிய வாய்ப்பை பெறலாம்.