Prasanna
குரு உபதேசம் – 3506
முருகனை வணங்கிட, உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3505
முருகனை வணங்கிட, மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம்.
குரு உபதேசம் – 3504
முருகனை வணங்கிட, வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3503
முருகனை வணங்கிட, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம்
குரு உபதேசம் – 3502
முருகனை வணங்கிட, முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம்.
குரு உபதேசம் – 3501
முருகனை வணங்கிட, கதிரவனை கருமேகம் மறைப்பது போல், காமதேகம் அறிவை மறைத்து நிற்கும் என்பதை அறியலாம்.