Prasanna
குரு உபதேசம் – 3485
முருகனை வணங்கிட, உணவிலே மென்மை, உள்ளத்திலே மென்மை, செயலிலே மென்மை, சொல்லிலே மென்மை, பார்வையிலே மென்மை, நடையிலே மென்மை (பணிவுடன் நடத்தல்) என ஆறுவகையான மென்மையான பண்புகளை அறிந்து கொள்ளலாம். அந்த ஆறு வகையான மென்மைப் பண்புகளை வாழ்விலே கடைப்பிடிக்கும்படியான அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3484
முருகனை வணங்கிட, புண்ணியவான்கள்தான் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற முடியும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3483
முருகனை வணங்கிட, மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும், மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.