Prasanna
குரு உபதேசம் – 3463
முருகனை வணங்கிட, முருகப்பெருமானை மனமுருகி பூசித்து ஆசி பெறாவிடில், இந்த உலகினில் அவர் தமக்கு ஒன்றும் இல்லை இல்லை, எதுவுமே இல்லை என்பதை உணரலாம்.
குரு உபதேசம் – 3462
முருகனை வணங்கிட, உயிர்களுக்கு தொண்டு செய்கின்ற அற்புதமான வாய்ப்பையும், அதற்குரிய அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3461
முருகனை வணங்கிட, ஜென்மத்தைக் கடைத்தேற்றிட, முருகப்பெருமானின் அருளை பெறாமல் எவ்விதத்திலும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை அறியலாம்..
குரு உபதேசம் – 3460
முருகனை வணங்கிட, ஒன்பது கோடி மனிதர்களை ஞானிகளாக்கிய அகத்தீசன் திருவடிகளை பூசிப்பதே சிறந்த பக்தியாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3459
முருகனை வணங்கிட, நிலையில்லாததை நிலையென்று நம்பி மயங்குகின்ற மயக்கம் நீங்கி, எது நிலையானது, எது நிலையற்றது என்பதை உணருகின்ற தெளிவான அறிவைப் பெற்று, அந்த நிலையான ஒன்றை அடையும் மார்க்கம்தனை உணர்த்துவான் முருகப்பெருமான்