Prasanna
குரு உபதேசம் – 3455
முருகனை வணங்கிட, செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே, நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும்.
குரு உபதேசம் – 3454
உடம்பிற்கு அதிக சக்தி தந்தால் காமத்தை உண்டு பண்ணுமென்றும், சக்தி தராவிட்டால் உடம்பு நலிந்து விடும் என்றும், மிகுதியான உணவு மிகுதி காமமாக மாறுவதினாலே காமம் அதிகமாகி ஞானம் கெட்டுவிடும். உணவு இல்லையேல் உடம்பு நலிந்து ஞானம் கெட்டுவிடும். உடம்பு என்பது உணவின் அடிப்படை, ஞானமும் யோகமும் உடம்பின் அடிப்படையில் வருவது. ஆதலின் உடம்பை காக்க உணவினை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும். ஞானம் அடைய உடம்பை கட்டுப்பாடாக வைத்து கொள்ள வேண்டும். ஆக உடம்பும், உயிரும், … Read more
குரு உபதேசம் – 3453
முருகா என்றால், பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3452
பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவற்றை வென்று, என்றும் இளமையாக அழிவிலாத ஒளி உடம்பை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான அறிவும், சாகாக்கல்வியும் ஆகும்.