Prasanna
குரு உபதேசம் – 3449
முருகா என்றால், உணவிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவையும், சிந்தையில் தூய்மை உண்டாகி, சிந்தையில் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், செயல் தூய்மை உண்டாகி செயலிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், சொல்லிலே தூய்மை உண்டாகி, சொல்லிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், பார்வையிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும் பெற்று தீவிர சைவநெறி நின்று முருகனது ஆசிகளை முழுமையாக பெறலாம்.
குரு உபதேசம் – 3448
முருகா என்றால், காலத்தையும் அறிந்து வெல்லலாம், காலனையும் அறிந்து வெல்லலாம். காலத்தையும், காலனையும் வென்று பொடிப்பொடியாக்கிய கந்தபெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவார்கள். கருணைக்கடல் கந்தபிரான் திருவடியை மனமுருகி பூஜித்தால்தான், காலத்தை வென்று, காலனையும் வெல்கின்ற சாகாக்கல்வியை கற்க முடியும். அதை விடுத்து எத்துணை கல்வி கற்றாலும் பயனில்லை, எத்துணை அறிவு இருந்தாலும் பயனில்லை, எத்துணை ஆற்றல் இருந்தாலும் பயனில்லை, வெல்லற்கரிய மாமாயை வெல்லும் சாகாக்கல்வியை கற்காவிட்டால் எந்த பயனும் இல்லை என்பதை … Read more
குரு உபதேசம் – 3447
முருகா என்றால், பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகிய அனைத்தையும் நீக்கி என்றும் இளமையான தேகத்தைப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம்.