குரு உபதேசம் – 3446
முருகா என்றால், காமம் அற்று போகும், பொறாமை நம்மை விட்டு விலகும், கோபம் நீங்கிவிடும், பேராசை அறவே இருக்காது, பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும், லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.
முருகா என்றால், காமம் அற்று போகும், பொறாமை நம்மை விட்டு விலகும், கோபம் நீங்கிவிடும், பேராசை அறவே இருக்காது, பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும், லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.
முருகா என்றால், பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம், அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து, பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.
முருகா என்றால், உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும், அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும், அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.
முருகா என்றால், பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.
முருகா என்றால், வீடு கட்டுதல், சுப செயல்கள் செய்தல், ஆக்க பணிகள் செய்தல் என்ற அனைத்திற்கும் கடன் வாங்கி செய்யாமல் இருக்கின்ற சூழ்நிலைக்கேற்ப வாழ்கின்ற மனவலிமை பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
முருகா என்றால், சைவ உணவை மேற்கொள்ள செய்தும், தொடர்ந்து அன்னதானம் செய்ய வைத்தும், தன் திருவடியை தொடர்ந்து பூஜிக்க வாய்ப்பு தந்தும், வன்மனத்தை நீக்கி உயர்ந்த பண்புள்ள தாய்மை குணத்தை தந்தருள்வான் முருகப்பெருமான்.
முருகா என்றால், தாயினும் மிக்க தயவுடை தயாநிதி முருகனது திருவடிகளை எந்த சோதனை வந்தாலும் விடாது இறுகப் பற்றிக் கொண்டு, இன்னுயிர் நீப்பினும் உமது பொன்னடி மறவேன் என்றே திடசித்த வைராக்கியத்துடன் அயராது பாடுபட்டால்தான் யாருக்கும், தேவர்க்கும், மூவர்க்கும் எட்டா ஞானபண்டிதனின் திருவடிகள் அன்பர் தம் விடாமுயற்சியினால், அன்பினால் கட்டுப்பட்டு தோன்றி காத்தருளும் என்பதை உணரலாம்.
முருகா என்றால், பல கோடி ஜென்மங்களாக புண்ணியங்கள் செய்திருந்தாலன்றி, ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜிக்க முடியாது என்பதை அறியலாம்.